2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ஆதரவாளர்களுடன் தனித்தனியாக , புன்முறுவலுடன் கதைத்த ரணில்

Super User   / 2010 மே 01 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன் 

EXCLUSIVE ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு உறுதுணைபுரிந்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ முதலிடத்தைப்பெற்றிருந்தார்.

தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த ஆதரவாளர்களுக்கு மத்தியில் வழமைக்கு மாறாக அருகில் சென்று,எல்லோருடனும் தனித்தனியாக ரணில் விக்கிரமசிங்ஹ புன்முறுவலுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .