Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 மே 30 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது.
கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் சர்வமதப் பிரார்த்தனை ஒன்று இன்றைய தினமட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், யோகராசா கலாஞ்சினி மற்றும் சண்முகம்பிள்ளை சறோயினி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உங்களால் கிளிநொச்சி நகரில் உள்ள அமைப்பொன்றின் சார்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் அறிக்கையிட்டு உள்ளனர்
ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அரசியல் அமைப்பில் தங்களுக்கு உள்ள உரிமையினை நீதிமன்றம் மதிக்கிறது. அதேவேளையில், தங்களுடைய ஆர்ப்பாட்டத்தினால் போது ஒழுங்கிற்கும் பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago