2021 ஜூன் 16, புதன்கிழமை

நிரூபமா ராவ் இன்று இரவு கொழும்பு வந்துசேர்ந்தார்

Super User   / 2010 மார்ச் 06 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிரூபமா ராவ் இன்று இரவு 10.30 மணியளவில் கொழும்பு,கட்டுநாயக்கா சர்வதேச விமான  நிலையத்தை வந்தடைந்தார்.

தமிழ்மிரர் இணையதளம் சற்று முன் விமான நிலையத்துடன் தொடர்புகொண்டபோது, விமான நிலைய அதிகாரிகள் நிரூபமா ராவின் வருகையை உறுதிப்படுத்தினர்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பதாகவே மூன்று பேர்கொண்ட தூதுக்குழுவினருடன் இந்திய வெளிவிவகாரச்செயலாளர் கொழும்பு வந்து சேர்ந்தார் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .