2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

இன்று நாவலப்பிட்டி,கும்புறுப்பிட்டி குட்டித்தேர்தல் ; பாதுகாப்பு அதிகரிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 36 வாக்குச்சாவடிகள், திருகோணமலை மாவட்ட கும்புறுப்பிட்டி தேர்தல் தொகுதி ஆகியவற்றுக்கான மீள் தேர்தல்கள் இன்று இடம்பெறுகின்றன.

சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என பொலீஸ் வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை நான்கு மணிவரை இடம்பெறும்.

அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும், இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப்பொலீஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .