2021 ஜூன் 14, திங்கட்கிழமை

’இனவாதம் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’

Editorial   / 2017 மே 26 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.மகா, எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

"எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்" என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்ததமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததன் பின்னர் மக்கள மத்தியில் உரையாற்றிய அவர்,

"இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் நீந்தி இலங்கையை வந்தடைந்தவர். இவரின் சாதனை உலகசாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்றவர்களை போன்று, இப்படிப்பட்ட ஒருவர் வல்வெட்டித்துறையில் இருந்து சாதனை படைத்திருக்கிறார். அவர் என்னுடைய சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நம் மத்தியில் இன நல்லிணக்கம் முக்கியமானது. இன்று நாட்டில் பலர் இனவாத கருத்துக்களை பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பருத்தித்துறையையும் தெய்வேந்திர முனையையும் இணைக்கும் பணியினை நாம் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொள்ள வேண்டும்.

சாதனையாளர் ஆழிக்குமரன் குமார் ஆனந்தன், இன ஒற்றுமைக்கும் எடுத்துகாட்டாக திகழ்கின்றார். வல்வெட்டித்துறையில் வடக்கில் பிறந்து தெற்கில் திருமணம் முடித்து இன ஒற்றுமைக்கு வழிகோலியிருக்கின்றார். இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு உங்கள் முன் தமிழில் பேச முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்" எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .