Editorial / 2020 மார்ச் 03 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கணக்காய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்று (030 தொடர்கின்றது.
நேற்று (02) பகல் முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்திருந்தது.
கணக்காய்வு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இதுவரை கணக்காய்வு சேவை ஸ்தாபிக்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கணக்காய்வு அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
15 minute ago
19 minute ago
14 May 2026
14 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
14 May 2026
14 May 2026