2026 மே 02, சனிக்கிழமை

இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு

Freelancer   / 2024 ஜூன் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்பவர்களே நேற்று இரவு 8 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களான குறித்த இரண்டு சிறுமிகளும் நேற்று மாலை சைக்கிளில் கடைக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கடைக்குச் சென்ற சிறுமிகளைக் காணவில்லை எனத் தேடிய உறவினர்கள், வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்தனர். அவர்கள் பயணித்த சைக்கிளும் அங்கு காணப்பட்டது.

இருவரும் சைக்கிளுடன் தவறுதலாக நீர்நிலையில் வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .