2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இலங்கைத்தமிழர் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு-பேராசிரியர் மார்க்ஸ்

Super User   / 2010 மார்ச் 09 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொழும்பு தமிழ் சங்கத்தில் பகை மறப்பு என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

ஒருவாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும், பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார். 

தமிழ்தேசியம்,இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எனினும் இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று பார்வையாளர்களில் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

அச்சந்தர்ப்பத்திலேயே பேராசிரியர் இந்தியாவை நம்பியது தமிழ் மக்கள் செய்த தவறு என்பதை நாம் தமிழ் நாட்டிலும் கூட சொல்லிவந்திருக்கின்றோம் என்று பதிலளித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது கூட பல்வேறு காரணங்களின் காரணமாக வெறும் வார்த்தையளவில் மாத்திரம் காணப்படுகின்றது என்றும் பேராசிரியர் மார்க்ஸ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .