2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையில் தற்போது சமாதானம் நிலவுகிறது-ஆஸி. பிரதமர்

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்  தற்போது சமாதானம் நிலவுவதாக  ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகலிடம் கோரி விண்ணப்பிப்பிக்கும் இலங்கை  மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமைகள் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கும் நிலையில், அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் கெவின் ருட் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தற்போது பாதுகாப்பு சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றிருப்பதாகவும் கெவின் ருட் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .