Freelancer / 2024 மே 22 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும் ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் கடல் வழியாக தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தருவைகுளம் கரையோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய, மாநில உளவுத்துறை விசாரணையினைத் தொடர்ந்து இலங்கை மீனவர்கள் இராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் பின்னர் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி வரை அந்த மீனவர்களை சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. (a)
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago