2021 ஜூன் 19, சனிக்கிழமை

இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எங்கே?

Super User   / 2010 ஏப்ரல் 24 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி கிடைக்குமா என்பது தொடர்ந்தும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.

இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரை ஆறுமுகன்   தொண்டமான் புதிய அமைச்சை பொறுப்பேற்பாரா என்ற தகவல்கள் எதுவும் தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கவில்லை.

இன்று காலை முதல் தமிழ்மிரர் இணையதளம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் தொடர்புகொள்ள்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை,பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்துடன் காலையிலிருந்து தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி சற்று முன்னர் கைகூடியது.

முத்து சிவலிங்கம் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம்  செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப்பதவிகள் எதையும் பொறுப்பெடுக்கவில்லை என பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தற்பொழுது தொண்டமான் எங்கே இருக்கின்றார் என தமிழ்மிரர் இணையதளம் வினவியது.அவர் கொழும்பில்தான் இருக்கின்றார் என்று முத்து சிவலிங்கம் பதிலளித்தார்.

தொண்டமானின் வேறு தொலைபேசி இலக்கமொன்றை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்திடம் தமிழ்மிரர் இணையதளம் வினவியது.

தன்னிடம் தொண்டமானின் தொலைபேசி இலக்கம் இல்லையென முத்து சிவலிங்கம் கூறினார்.

பின்னர்,இலக்கமொன்றை அவர் தந்தபோதிலும் அந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

இதேவேளை,ஆறுமுகன் தொண்டமான் நேற்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0

 • xlntgson Saturday, 24 April 2010 08:25 PM

  அமைச்சர் பதவியை விட மனோ கணேசனையும் திகாம்பரத்தையும் வடிவேல் சுரேஷை முறியடித்தது போல் முறியடிப்பது எப்படி என்பதே அவரது கவலையாக இருக்கலாம்.

  Reply : 0       0

  A.S.Chandrabose Saturday, 24 April 2010 08:34 PM

  தேசிய நலனிற்கு பெரும்பங்களிப்பை வழங்ககும் தொழிலாளர்களின் சமுகனலன்களை செயல்பட்டுத்த தொண்டமான் அவர்கட்கு பொருத்தமான அமைச்சு வழங்குவது அவசியமாகும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .