2021 ஜூன் 19, சனிக்கிழமை

உலக தமிழர் பேரவை சர்ச்சை;பிரி. பிரதிநிதி இலங்கைக்கு விளக்கம்

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்துகொண்டதாக பிரிட்டிஷ் வெளிவவகார அமைச்சின் நிரந்தர பிரதிச்செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கைக்குள் அரசியல்த் தீர்வினை ஏற்படுத்துவதற்கு அமைதி வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களிடம், பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் கோரியதாகவும் பீட்டர் ரிக்கட்ஸ் குறிப்பிட்டார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக, அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் பொதுநலவாய அமைப்புகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்வது வழக்கம் என்று பீட்டர் ரிக்கட்ஸ் விளக்கமளித்தாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

உலகத் தமிழர் பேரவை விடுதலைப் புலிகளின் அமைப்பு என இலங்கை குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அண்மையில் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் கலந்துகொண்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்திருந்தது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .