Editorial / 2024 ஜூன் 06 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 44மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டது. அரசு மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த 62 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் 54 ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலான சரத்து விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் விதிகளை மீறும் வகையில் ஒருசில ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது.சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் .அதனால் உடனடியாக நிறைவேற்ற வேண்டாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும் அரசாங்கம், வியாழக்கிழமை (06) காலை சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக நின்றது அவ்வாறானால் இரு நாட்களாவது விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அரசாங்கத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் இது தொடர்பில் கடும் சர்ச்சை ,தர்க்கம் காலை முதல் சபையில் ஏற்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் இரு கோரிக்கைகளையும் நிராகரித்த அரசாங்கம் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது.
இவ்வாறான நிலையில் விவாத முடிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான அலி சப்ரி ரஹீம்,,ஜோன் செனவிரத்ன அநுர பிரியதர்சன யாப்பா,பிரியங்கர ஜயரத்ன நிமல் லான்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான பௌசி ஆகியோர் வாக்களித்தனர்
இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்,தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அத்துடன் இந்த வாக்கெடுப்பில் அரசு மற்றும் எதிர்கட்சிகளைசேர்ந்த 62 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago