Freelancer / 2024 ஜூன் 30 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது. (a)
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago