2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொள்ளவில்லை

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொள்ளவில்லை.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க தேர்தல் வேலைகளில்  ஈடுப்பட்டிருப்பதாலேயே,  மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஜெனீவா சென்றிருப்பதாக மனித உரிமைகள் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டன. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தின் 13வது அமர்வு நேற்று ஆரம்பமாகியிருந்தது.  இந்த அமர்வு எதிர்வரும் 26ஆம் திகதி முடிவடையும் எனவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு மனித உரிமைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. 

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து மொஹான் பீரிஸ் விளக்கமளிக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏதும் சுமத்தப்படுமானால், அவற்றை சட்டமா அதிபர் தலைமையிலான குழுவினர் எதிர்கொண்டு விளக்கமளிக்கவிருப்பதாகவும் மனித உரிமைகள் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.   

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .