2026 மார்ச் 26, வியாழக்கிழமை

ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

Mayu   / 2024 ஜூன் 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட  தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய,  இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும்  உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள்   ஒலிபெருக்கி  மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (22) மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளை யும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி  பிடித்ததாக இலங்கை  கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து  செவவாய்க்கிழமை (25) 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

 இதனையடுத்து புதக்கிழமை (26) வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து  கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை  தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .