Freelancer / 2024 மார்ச் 16 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார்.
இரோமி விஜேவர்தனவின் கலை வாழ்க்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு’Celebration of women’ எனும் தொனிப்பொருளில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஓவியக் கண்காட்சிகளை நடாத்தும் வின்ஸ்டன் சுலுதாகொட தனது 34 ஆவது ஓவியக் கண்காட்சியை ‘பாவனவக சாந்திய'(தியானத்தின் அமைதி) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தார்.
46 வருடங்களாக ஓவியத் துறையில் ஈடுபட்டு வரும் வின்ஸ்டன், வெளிநாடுகளிலும் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
அன்றாட வாழ்க்கை உறவுகள், உலகளாவிய நெருக்கடிகள், மத வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட பல வண்ணமயமான ஓவியங்கள் இந்த ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெற்றிருந்தன. ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட வந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, சில குழு புகைப்படங்களிலும் இணைந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டன. (a)

11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago