2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கங்கையில் சிறுவனை வீசிய தாயை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுகங்கையில் தனது மூன்று வயது சிறுவனை வீசிய தாயார் களுத்துறை பெண் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை நீதிமன்றத்தில் குறித்த தாயார் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதி  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களுகங்கையில் வீசப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் வாகன சாரதி ஒருவரால் காப்பாற்றப்பட்டிருந்தார். தற்போது குறித்த சிறுவன் கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .