Kanagaraj / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கான கட்டணம், ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள நிர்வாக ஆணையாளர் நிஹால் ஜயசிங்ஹ தெரிவித்தார்.
அதனடிப்படையில், முதியோருக்கான கடவுச்சீட்டு 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரையிலும், சிறுவர்களுக்கான கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் சேவையின் அடிப்படையில், முதியோருக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரையிலும் சிறுவர்களுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
28 Oct 2025