2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைதிகளைப் பார்வையிட அனுமதி

Simrith   / 2024 ஏப்ரல் 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரமழான் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு சிறைச்சாலைக் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடக பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் 11 ஆம் திகதி ரமழான் பண்டிகையினை முன்னிட்டு இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மாத்திரம்  உறவினர்களை பார்வையிடுவதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை கைதிகளுக்காக உறவினர்களினால் கொண்டுவரப்படும் இனிப்பு வகை உணவுகள், உணவு மற்றும் சுகாதார பொருட்களை தற்போதுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பாதுகாப்பு நடைமுறைகளுடன் வழங்குவதற்காக  அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .