2026 மார்ச் 11, புதன்கிழமை

கைதிகள் தப்பி ஓட்டம்

Freelancer   / 2024 மார்ச் 29 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுராதபுரம் - கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என   ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .