Kogilavani / 2017 மே 31 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, மாகல்ல பாலத்துக்கு அருகில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், 36 வயதுப் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த 41 வயது நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினார்.
இச்சம்பவத்தில், வந்துரம, கீம்பிய பிரதேசத்சைத் சேர்ந்த தமரா விஜேதிலக்க என்பவரே, உயிரிழந்துள்ளார்.
மாகல்ல பாலத்துக்கு அருகில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கத்திக்குத்தில் முடிந்ததாகவும் மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago