Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 07 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த தினங்களில் ஏற்பட்ட திடீர் அனர்த்தங்களினால், சில பிரதேசங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான மேலதிக நிதியைத் திரட்டிக்கொள்வதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், நாட்டின் பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால், பல உயிர்கள் பறிபோனதுடன் சொத்துகளும் அழிவடைந்தன.
அதேபோன்று, அனர்த்தத்துக்குள்ளான பகுதிகளில், கழிவுகள் அதிகமாக ஆங்காங்கு சேர்ந்துள்ளன. அக்கழிவுகளை துரிதமாக அகற்ற வேண்டிய தேவையை, சுகாதாரப் பிரிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வாறு நிரம்பி வழிகின்ற கழிவுகளை அகற்றுவதற்கு, உள்ளூராட்சி மன்றங்களில் போதியளவு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமையினால், அப்பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதி தேவையாகவுள்ளது.
அதற்காக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு 100 மில்லியன் மேலதிக நிதியைத் திரட்டிக்கொள்வது தொடர்பில், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago