2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கிரிக்கெட் அணி தாக்குதல் விசாரணையில் ஒத்துழைப்பு இல்லை-பாகிஸ்தான்

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் கடந்த வருடம்  இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில்  இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹுமான் மலிக் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல்ச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு  இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானிலுள்ள இலங்கைத் தூதரகத்து முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவிருப்பதாகவும் ரஹுமான் மலிக் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .