Yuganthini / 2017 ஜூன் 01 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
44 மாணவர்கள் மரணம்
8 மாணவர்கள் மாயம்
144 பாடசாலைகள் சேதம்
7,850 மாணவர்கள் நிர்க்கதி
72 பாடசாலைகளில் முகாம்
“இயற்கை அனர்த்தங்களினால், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த 44 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். அத்துடன், மாணவர்கள் எட்டுப்பேரைக் காணவில்லை” என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இந்த அனர்த்தங்களினால் 144 பாடசாலைகள் சேதடைந்துள்ளன. அதில் 74 பாடசாலைகள் முழுமையாகவும் 70 பாடசாலைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதனால், 7,850 மாணவர்கள் நிர்க்கதியாகி உள்ளதுடன், 72 பாடசாலைகள் முகாம்களாகவும் நிவாரண முகாம்களாகவும் உள்ளன என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“மாணவர்களுக்கு அப்பால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி மூன்று மாகாணங்களிலும், 150 அதிபர் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதேவேளை, சேதமடைந்த பாடசாலைகளை மீளவும் கட்டியெழுப்புவதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago