2021 ஜூன் 24, வியாழக்கிழமை

காலி மாவட்டத்தில் தோல்வியடைந்த ஐ.தே.க.வேட்பாளர் வஜிர அபேவர்தன அரசுடன் இணைவாரா?

Super User   / 2010 ஏப்ரல் 17 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் வஜிர அபேவர்தன தன்னுடைய இறுதி முடிவை அடுத்த வாரம் எடுக்கவுள்ளார் என டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வாரா என டெயிலிமிரர் இணையதளம்  வினவியது.

தான் எந்தக்கருத்தையும் ஊடகத்துக்கு தற்போது கூற முடியாது என்றும் அடுத்த வாரம் முடிவுகள் தெரியவரும் என்றும் அவர் பதிலளித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படவேண்டும் என வஜிர அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson Saturday, 17 April 2010 09:48 PM

    அமைச்சு பதவி எதுவும் கோராமலா? ஆச்சர்யமாக இருக்கிறதே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .