2021 ஜூன் 19, சனிக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் 22ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}சுகந்தினி ரட்னம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்மிரர் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இன்று மூதவைப் பேரவையுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இதன்போது, எதிர்வரும் 22ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுத்ததாகவும் கே.பிரேம்குமார் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பரீட்சைகளை நடத்துவதற்கான நேரசூசி அட்டவனை  தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமையால், மீண்டும் புதிய நேரசூசி அட்டவனை தயாரிப்பதற்கான நடவடிக்கையில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியை தான் தற்காலிகமாகப் பொறுப்பேற்றிருப்பதாகவும் கே.பிரேம்குமார் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .