2021 ஜூன் 16, புதன்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் விரைவில் இந்தியா பயணம்?

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் இந்தியா செல்லவுள்ளார். 

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் உயர்மட்ட ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருப்பதாக இன்று தமிழ்மிரர் இணையதளத்திடம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலக  ஊடகச் செயலாளர் தேவராஜ் தெரிவித்தார்.

இந்த அரசியல் உயர்மட்ட ஒன்றுகூடல் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் நடைபெறவிருப்பதுடன்,  இந்தக் கூட்டத்திலேயே  சிவநேசத்துரை சந்திரகாந்தன் இந்தியா செல்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அண்மையில்  இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இந்தியாவிற்கு வருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .