2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கொழும்பில் புலிகளுக்கு நிதி சேகரித்த தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினரை தேடி வலை வீச்சு

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக்  கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததாக அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் இயங்கியபோது, வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்தது.

இவ்வாறு நிதி உதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப் பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால்  மீட்கப்பட்டதாகவும் அரசாங்க தொலைக்காட்சி மேலும் குறிப்பிட்டது. 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .