2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கொழும்பு மாவட்ட வேட்பாளர் விருப்பு வாக்கு அடிப்படையில் ரணில், விமல் முன்னிலையில்

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ 230,957 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட தேசிய  சுதந்திர  முன்னணியின்  தலைவர் விமல் வீரவன்ச 280,672 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 மேலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட ஆர்.துமிந்த சில்வா 146,336 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், பதாலி சம்பிக்க ரணவக்க 120,333 வாக்குகளைப் பெற்று மூன்றாவது  இடத்தி்லும் உள்ளனர்..

கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா 98,456 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்சி கொழும்பு மாவட்டத்தில் 110,000 வாக்குகளைப் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .