2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

காணிப் பிரச்சினையால் ஒருவர் கொலை

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தகஸ் எல பிரதேசத்தில் காணி பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று (20) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கஹபிலியாவத்த, கடவளை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கமல்ல வீர தயாரத்ன த சில்வா என்ற வர்த்தகரே கொலை செய்ப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் சகோதரியின் மகனாவார் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .