2021 ஜூன் 19, சனிக்கிழமை

சனத் ஜயசூரியவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : தமிழகத்தில் 20 பேர் கைது

Super User   / 2010 ஏப்ரல் 06 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியவுக்கு எதிராக தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்தியத்தகவல்கள் கூறுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர்வரை தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

மும்பை இந்தியன் அணிக்காக விளையாடும் சனத் ஜயசூரிய சென்னையில் விளையாட அனுமதிக்கக்கூடாது எனக்கோரியே புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சனத் ஜயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

போர்க்குற்றம் புரிந்துள்ள அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சனத் ஜயசூரியவுக்கு விளையாட அனுமதிக்கக்கூடாது என புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனத் ஜயசூரியவுக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .