2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஐஸூடன் கான்ஸ்டபிள் கைது

Editorial   / 2025 ஜூலை 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ததாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபரின் சிறப்பு நடவடிக்கை போக்குவரத்து தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  பொலிஸ்  காவலில் எடுக்கப்பட்டார்.

ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை கந்துரே அதிகாரிகள் மாளிகாவத்தையில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்து சந்தேக நபரைக் கைது செய்து, மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து, பின்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .