2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சர்வதேச ஊடக விருதிற்காக திஸாநாயகத்தின் பெயர் பரிந்துரை

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஊடக விருதொன்றிற்காக ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகத்தின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டிஷ் ஊடகத்துறை விருதிற்காக  எகிப்து, ஈரான், ஈராக் ஆகிய 16 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பெயர்கள்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜெ.எஸ்.திஸாநாயகம்  அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த விருது வழங்கும் நிகழ்வு பிரிட்டனில் நடைபெறவுள்ளது. 

கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு
ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த
சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை
வெளியிட்டாரென்றும்,  இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம்
பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ.எஸ்.திஸாநாயகம் 
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவசரகால சட்ட
விதிகளின் கீழும் ஜெ.எஸ்.திஸாநாயகம்  கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .