Freelancer / 2024 மார்ச் 29 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாத மலைக்கு சென்ற இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மும்பையிலிருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு விழுந்து கிடந்துள்ளார்.
அவர் இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை மலை விளிம்பிலுள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் சுற்றுலாப் பயணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். R
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago