2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆட்சி முறை;எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம்-டியூ.குணசேகர

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக அரசியல் விவகாரம், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ.குணசேகர இன்று தெரிவித்தார்.

இந்தக் கட்சிகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு  ஆதரவு தெரிவித்திருந்ததுடன், தொகுதிவாரி தேர்தல் முறைமையும் ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் டியூ.குணசேகர குறிப்பிட்டார்.

சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை சிறந்தது என்று சிறுபான்மைக் கட்சிகள் தெரிவிக்க ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

தேர்தல் மறுசீரமைப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும் அரசியல் விவகாரம், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ.குணசேகர குற்றஞ்சாட்டினார்.

எது எவ்வாறாயினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் எனவும் டியூ.குணசேகர  தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .