2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜனநாயக தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ளது.

ஜனநாயகத்தை பலப்படுத்துவது, தேசிய மீள்ளிணக்கம், பொருளாதார அபிவிருத்தி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு, தேசிய பாதுகாப்பு ஆகியன ஜனநாயக தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கைகளாகும்.

யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கான வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் அவர்களுக்கான இலாபங்களை பெற்றுக்கொடுக்கும் எனவும் தனது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் ஜனநாயக தேசிய முன்னணி உறுதியளித்தது.

நாட்டில் வழமையான நிலையை உருவாக்கவிருப்பதுடன், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யவிருப்பதாகவும் ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்தது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வெற்றிபெற்றால், 30 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் ஜனநாயக தேசிய முன்னணி குறிப்பிட்டது.

ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் விஜித்த ஹேரத் ஆகியோர் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின்போது, தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகளை மதகுமார்களிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .