2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு தேசியப்பட்டியல் எம்.பீ பதவி வழங்க நாம் தயார் ; விடுதலை செய்ய அரசாங்கம் தயாரா ?

Super User   / 2010 மார்ச் 15 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா வை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயார் என்றால் மக்கள் விடுதலை முன்னணி தன்னுடைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பொன்சேகாவுக்கு வழங்குவதற்குத்தயார்.

எனினும்,பொன்செகாவை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதா? முடிந்தால் விடுதலை செய்யச்சொல்லுங்கள்.

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ஸ அமரசிங்க சற்று முன் இலங்கையின் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பிரத்தியேகப்பேட்டியொன்றில் அரசாங்கத்துக்கு  சவால் விடுத்தார்.

கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருப்பீர்களா என்று தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.தனது கட்சி தீர்மானிக்கும்வரை தாம் தலைமைத்துவத்தில் இருப்பதாக சோமவங்ஸ அமரசிங்க  பதிலளித்தார்.

அத்தோடு,தன்னுடைய  மனச்சாட்சிக்கேற்ப தன்னால் தலைமைப்பதவியில் இருக்க முடியும் எனக்கருதும் காலம்வரை தாம் அந்தப்பதவியை வகிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .