2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா மதியநேர உணவுக்கு மறுப்பு

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ அதிகாரிகளால் நேற்று வழங்கப்பட்ட மதியநேர உணவை  ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவிற்கான மதியநேர உணவை அவரது  உறவினர் ஒருவர் எடுத்துவந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

ஜெனரல் பொன்சேகாவிற்கான மதியநேர உணவை தினமும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா எடுத்துசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனோமா பொன்சேகா கொழும்புக்கு வெளியே சென்றிருந்ததால், நேற்று அவரது உறவினர் ஒருவர் மதியநேர உணவை எடுத்துச்சென்றதாக ஜனநாயக தேசிய முன்னணி குறிப்பிட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான உணவை அவரது உறவினர் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,  இராணுவ அதிகாரிகளால்  வழங்கப்பட்ட உணவை  ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கான பெயர்ப்பட்டியலில் குறித்த உறவினரது பெயர் இருக்கிறது என இராணுவத்தினர் தெரிவித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கான பெயர்ப்பட்டியல் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தபோதிலும், அவை கடற்படை தலைமையத்திற்கு அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து உணவு வழங்குவதற்கு அனோமா பொன்சேகாவுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார்.

உத்தியோகபூர்வமாக ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு தனிப்பட்டவர்களின் புதிய பெயர்ப்பட்டியல் எதனையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .