2025 ஜூலை 02, புதன்கிழமை

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்கும்: பிரதமர்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வருடங்களாக இலங்கை முகங்கொடுத்து வந்த மனித உரிமை தொடர்பான  பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளதால் ஜி.எஸ்.பி பிளஸ் தகைமையை இலங்கைக்கு மீண்டும் வழங்கும் படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உத்தியோகபூர்வமாக கேட்கவுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள்  ஆணையகத்துடன் தொடர்பான பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வந்துள்ளதால்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றியத்திடம் எழுத்து மூலம்  இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ் தகைமையை  வழங்கும் படி கேட்பார் என புதன்கிழமை (30) மாலை தொழிற்சங்கவாதிகளைத் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

உள்நாட்டு மனித உரிமைகள் விசாரணையக் கோரும் தீர்மானம்  நிறைவேற்றப்படும். நாட்டை பிரிக்க விரும்புகின்றவர்களே இந்த தீர்மானத்தை எதிர்க்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் பற்றி தெரிவித்த விமர்சனங்களையிட்டே அவர் மேற்கண்டவாறு கூறினார். எனினும், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர்களுக்கு உண்மையை தெளிவுப்படுத்த போவதாக அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .