2021 ஜூன் 16, புதன்கிழமை

டக்ளஸ் தேவானந்தாவின் உடல் நலத்தில் முன்னேற்றம்;ஞாயிறன்று யாழ்.செல்கிறார்.

Super User   / 2010 மார்ச் 04 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அல்லது நாளை ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறவுள்ளதாக   தமிழ் மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நான்கு நாட்களுக்கு முன் கொழும்பிலுள்ள முன்னணி தனியார் ஆஸ்பத்திரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இச்செய்தி கேள்விப்பட்டவுடன் உடனடியாக தமிழ் மிரர் இணையதளம் குறுந்தகவல் முறை மூலம் அவரது கையடக்க தொலைபேசிக்கு தகவல் ஒன்றை அனுப்பியது.

ஆஸ்பத்திரியிலிருந்துகொண்டே எம்முடன் தொடர்புகொண்ட டக்ளஸ் தேவானந்தா தாம் தற்போது சுகத்துடன் இருப்பதாகத்தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்களுக்காகவும்,மக்கள் பணிக்காகவும் ஞாயிற்றுக்கிழமை தாம் யாழ் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ டக்ளஸ் தேவானந்தாவின் உடல் நலம் குறித்து நலன் விசாரிப்பதற்காக நேற்று ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .