2021 ஜூன் 24, வியாழக்கிழமை

டெங்கு நோயால் பொலிஸ் உத்தியோகத்தர் மன்னாரில் மரணம்

Editorial   / 2020 ஜனவரி 13 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி பிரதேசத்தைச் சேந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (45) என்பவரே  இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காய்ச்சல் என தெரிவித்து கடந்த 10ஆம் திகதி மன்னார்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று  (12) மாலை  உயிரிழந்தார்.

மரண விசாரணையை அடுத்து சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காய்ச்சல் என மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .