Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் ‘நியூயோர்க் டைம்ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’, ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வொஷிங்டன் போஸ்ட்’.
1877-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் உரிமை பலரிடம் கை மாறியுள்ளது. இறுதியாக கடந்த 2013ம் ஆண்டில் இந்த பத்திரிகையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டொலருக்கு வாங்கினார். இந்த நாளிதழின் விற்பனை கடந்தாண்டில் 1 லட்சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்தது. கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக இதன் விற்பனை 1 லட்சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்தது.
இந்நிறுவனத்தில் 800-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணியாற்றினர். நிதி நெருக்கடி காரணமாக இவர்களில் 300-க்கும் மேற்பட்டோரை வாஷிங்டன் போஸ்ட் பணி நீக்கம் செய்துள்ளது. விளையாட்டு செய்தி பிரிவு, வெளிநாட்டு நிருபர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். இவர் சர்வதேச விவகாரங்கள் குறித்த செய்திகளை எழுதி வந்தார்.
பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் இஷான் தரூர் கூறுகையில், ”வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். என்னுடன் பணியாற்றிய சர்வதேச நிருபர்கள் பலரும் நீக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் நடவடிக்கையால் மனம் உடைந்துவிட்டேன்.
சுமார் 12 ஆண்டுகள் மிகச் சிறந்த நபர்களுடன் பணியாற்றியதை கவுரவமாகக் கருதுகிறேன். வேல்ட் வியூ என்ற பகுதியை வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி சர்வதேச விவகாரங்கள் குறித்த செய்தியை எழுதி வந்தேன். இதை பல ஆண்டுகளாக விரும்பி படித்த வாசகர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .