Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி-யாழ்ப்பாணம் வீதியில் (A009) மஹியாவ சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் வௌ்ளிக்கிழமை (06) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், இன்றிலிருந்து 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைத் திட்டத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் சுமூகமாக உரையாடினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .