2021 ஜூன் 17, வியாழக்கிழமை

டுபாயில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது காதலியின் கணவரை கொலை செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, குறித்த நபருக்கு ஆயுள்த் தண்டனை விதிக்கப்பட்டது.

டுபாய் சட்டத்தின் படி 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை ஆகும்.

குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, தனது கொலைக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவருடன் சண்டை மாத்திரமே இடம்பெற்றதாகவும், தான் கொலை செய்யவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

டுபாயிலுள்ள அல் ஜபிலியா எனும் இடத்தில் கடந்த ஜுலை மாதம் தனது காதலியின் கணவரை குறித்த நபர் கொலை செய்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .