2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த இலங்கையர்கள் மீட்பு

Freelancer   / 2024 மார்ச் 07 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் காயமடைந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

இந்திய கடற்படையினரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

INS கொல்கத்தா கப்பல், ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .