2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தமிழக மீனவர் - கடற்படை உறவுக்கு கச்சதீவு திருவிழா ஒரு பாலம்-பேச்சாளர்

Super User   / 2010 மார்ச் 01 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா இலங்கை கடற்படையினருக்கும்,தமிழக மீனவர்களுக்கும் இடையில் நட்புறவுப்பாலமாக அமைந்துள்ளது என கடற்படை ஊடகப்பேச்சாளர் காப்டன் அதுல செனரத் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

இம்முறை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 3000 பக்தர்கள் கச்சதீவு திருவ்ழாவில் கலந்துகொண்டனர்.இவர்கள் 114 படகுகளில் வந்துசேர்ந்தனர்.

இலங்கையின் சர்வதேச கடற்பரப்பு எல்லையில் எமது கடற்படையினர் அவர்களை பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றும் காப்டன் செனரத் மேலும் கூறினார்.

கடந்த காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் உண்மை இல்லை.இம்முறை வருகை தந்திருந்த பக்தர்கள் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள்.

கடற்படையினரின் பணிகளை அவர்கள் வெகுவாகப்பாராட்டினார்கள்.தங்களுடைய படகுகளில் எமது கடற்படையினருக்கு நன்றி தெரிவித்து சுலோகங்களையும்  பொருத்தியிருந்தனர் என கடற்படை பேச்சாளர் பதிலளித்தார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கச்சதீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .