2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

நேற்று நன்பகல் இரணைமடுவில் உள்ள இராணுவத்தலைமையகத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி உட்பட ஏனைய உயர் அதிகாரிகளுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இச்சந்திப்பில்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தரப்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தமிழ் மிரர் இனையதலத்திடம் மேலும் கூறினார்.

ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயிலேயே இராணுவத்தை கூட்டமைப்பு சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனைய கட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.அதுபற்றி தமக்குத்தெரியாது என மாவை சேனாதிராசா பதிலளித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில்,மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பிரசாரம் செய்வதற்குச்சென்ற கூட்டமைப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.     

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .