2021 ஜூன் 21, திங்கட்கிழமை

திருகோணமலை பொலீஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட 4 பேர் இடைநிறுத்தம்

Super User   / 2010 மார்ச் 15 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  பொலீஸ் தலமையக பொறுப்பதிகாரி உட்பட மேலும் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்களை பொலீஸ் மா அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் வியாபாரியொருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலீஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி டெயிலிமிரர் இணையதளத்துக்கு இத்தகவலை வெளியிட்டார்.

இந்தச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் ஒருவரைத்தேடி சீருடையில் பொலீஸார் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

அந்த வீட்டில் எந்தவித பதிலும் கிடைக்காததால்,வீட்டின் மறு புறத்தில் உள்ள யன்னலோரத்துக்கு அருகில் சென்றுள்ளனர்.அச்சந்தர்ப்பத்தில் வீட்டின் உள்ளேயிருந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து,பொலீஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.இங்கு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு வந்தவர்கள் பொலீஸார் என்பது அந்த வியாபாரிக்கு தெரியாது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .