2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

'தெற்கில் ஞானசாரர் ; வடக்கில் சிவாஜிலிங்கம்’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
“தென்னிலங்கையில் ஞானசார தேரரைப் போன்றே, வடக்கில் சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும், சொல்ல முடியாதவற்றையும் செய்ய முடியாதவற்றையும் பேசி வருகின்றனர்” என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாவற்குழி பகுதியில், பௌத்த தாதுகோபுரம் ஒன்றை நிறுவுவதற்காக, பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லையானால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். யாழ்ப்பாணம், இலங்கைக்கு வெளியே இல்லை.

இலங்கையின் சட்டம், அனைவருக்கும் சமமானது. எனவே, மேற்படி தாதுகோபுரம் நிறுவுவதற்கு அனுமதி பெறப்படவில்லை என்றால், எவரும் நீதிமன்றம் செல்லலாம்.
தெற்கில் யாரும், தாங்கள் விரும்பியபடி விகாரைகளையோ கோவில்களையோ, பள்ளிவாசல்களையோ அமைக்கலாம். அங்கே எந்தத் தடைகளும் இல்லை. தாதுகோபுரம் நிறுவுவதற்கு அனுமதி பெறவேண்டுமா என்பது தொடர்பாக ஆராய வேண்டும்” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .